குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பீகாரில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும்  இன்று(சனிக்கிழமை)  களமிறங்கினர்.

பாட்னாவில் மெகா கூட்டணி என்ற பெயரில் ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு இடையே சிறுவர்களும் சாலையில் அமர்ந்து போராடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here