25ஆம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.C-47 ராக்கெட்

0
128
File Image

14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ‘எக்ஸ் எல்’ வகையில் 21-வது ராக்கெட்டாகும். அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறுகிறது.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும். இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும். தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கான கவுண்ட்டவுன் வரும் 23ஆம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here