பி.எஸ்.என்.எல் தனது பம்பர் ஆஃபர் சேவையை  இரண்டாவது தடவையாக  மீண்டும் நீட்டித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், இந்த ஆஃபர், ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஆஃபர்  ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆஃபர் மூலம் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த கூடுதல் டேட்டா ஆஃபரை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு வழங்கப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டதன் மூலம், ரூ.186 மற்றும் ரூ.429 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.21ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல ரூ.485 மற்றும் ரூ.666 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.7ஜிபி டேட்டா கிடைக்கும். 

மேலும், ரூ.1699 பேக் மூலம் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 4.21ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போதைக்கு இந்த ஆஃபர் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here