பி.எஸ்.என்.எல். வழங்கும் 1500 ஜி.பி. டேட்டா சலுகை

0
261

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 1,999 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிவித்துள்ளது. பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ சலுகை நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது. முதற்கட்டமாக இச்சலுகை சென்னை மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மட்டும் வ்.

மேலும் 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1500 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2 எம்.பி.யாக குறைக்கப்பட்டு விடும். 

புதிய 1500 சி.எஸ்.55 பிராட்பேண்ட் சலுகையில் இந்தியாவிற்குள் அனைத்து பகுதிகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1500 ஜி.பி. டேட்டா, நொடிக்கு 200 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இதற்கு ஒருமாத தொகையினை பாதுகாப்பு முன்பணமாக செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை ஏப்ரல் 6, 2020 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மற்ற பாரத் ஃபைபர் சலுகைகளை போன்று இந்த சலுகையிலும் ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோஃபைபர் ரூ. 2499 பிராட்பேண்ட் சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஃபைர் ரூ. 2499 சலுகையில் நொடிக்கு 500 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் 1250 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here