பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜூன் மாதத்தில் ரூ.777 மற்றும் ரூ.1,277 என்ற விலையில் அறிவித்தது.

தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இரண்டு சலுகைகளும் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. ரூ.777 விலையில் 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.1,277 சலுகையில் 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இரண்டு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2Mbps ஆக குறைக்கப்படும். இந்த இரண்டு சலுகைகளையும் பயனர்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.777 சலுகையை ஒரு வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையில் வழங்கப்படுகிறது. இச் சலுகையை ரூ.23,310 செலுத்தி மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதே போல் ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதே சேவையை ரூ.38,310 என கட்டணம் செலுத்தி மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதேபோல் மாற்றி அமைக்கப்பட்ட ரூ.241 சலுகையில் 75 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்குகிறது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்