எல்லை பாதுகாப்புப் படை வீரரைத் தொடர்ந்து சிஆர்பிஎப் வீரரும் பிரதமர் மோடிக்கு வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை வீரர், தேஜ் பகதூரை தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர் ஜீத் சிங் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் துணை இராணுவ படையினருக்கு வழங்கப்படும் வசதிகளை பார்வையிட பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் சிஆர்பிஎப் ஜவான், ”20 ஆண்டுகள் சேவைக்கு பிறகு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் கூட இராணுவத்திற்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே பாகுபாடு பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு கூட நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது, அதேநேரம் அவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிகிறது. ஆனால் சிஆர்பிஎப் ஜவான்களுக்கு அவர்கள் குடும்பம் மற்றும் அன்பிற்குரியவர்களுடன் நாள் செலவிட அனுமதி வழங்கப்படுவதில்லை, அடர்ந்த காட்டில்தான் எங்கள் நேரத்தை செலவிட்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார். மேலும், ”நாட்டிற்கு இவ்வளவு செய்த பின்னரும் கூட எங்களுக்கு முன்னாள் இராணுவ வீரர் ஒதுக்கீடு மற்றும் மருத்துவ வசதிகள் கூட இல்லை” என்று மிகுந்த வலியுடன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”உண்ண உணவு இல்லை”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்