பி.இ.-எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல் வெளியீடு

0
290

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் இதனை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், கலந்தாய்வில் 10 பேர் 200 க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 5,397 விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை. மருத்துவக் கலந்தாய்வுக்கு பின் பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றார். ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6ல் தொடங்குகிறது.

இதேபோல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ராஜ் செந்தூர் 656 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை மாணவர் பிரவீண் 644 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஒரு திருநங்கையின் விண்ணப்பமும் ஏற்கப்பட்டுள்ளது. மொத்தம் 27417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

எம்.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கன முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here