பி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்

0
143

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதி‌மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை ‌மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட ‌வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன்‌ மூலம் விண்ணப்பிப்பதால் மாணவர் சேர்க்கை
வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.

ஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அண்ணா பல்கலைக்கழகம் இதனால் இரு தரப்புக்குமே நே‌ர விரயம் தவிர்க்கப்படுவதாக கூறி‌யது. இதனை ஏற்ற நீதிபதிகள் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக பெற்று கொள்ள அண்ணா பல்‌கலைகழகம் ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டினர்.

மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளம் கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை டிடி-யாக பெற்றுக்கொள்ள ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது; உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மூத்த கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

இவை மூன்றையும் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூன் 8-ம் தேதி
அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்