பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் திருப்பத்தூர் அருகே உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டிற்கான விழா வருகிற 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

விழாவையொட்டி 10நாட்களும் தினந்தோறும் சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்தி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

வருகிற 29ஆம்  தேதி அன்று மாலை கஜமுகாசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9ஆம் திருநாளான வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மாலை திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூறுணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here