குழந்தைகளைச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிற படிப்பாக, கோடிங் பாடங்களை வடிவமைத்துள்ளார் கோட் பண்ணுவின் நிறுவனரான அனிதா ராமன். இதனால் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சி அடைகிறது.

“என் பிள்ள இங்கிலீஷில புலி; தமிழில சிங்கம்” என்ற காலம் மலையேறி விட்டது. இப்ப நம்மைச் சுற்றி ஸ்மார்ட்ஃபோன்கள், கேம்கள், மொபைல் ஆப்கள், லேப்டாப் கணினிகள், ரோபோக்கள், தானியங்கி கார்கள், 3டி பிரின்டர்கள் என்று உலகம் மாறிவிட்டது. நம்மைச் சூழ்ந்துள்ள இந்தத் தொழில்நுட்ப உலகத்தின் மொழி கோடிங். கோடிங்தான் நமது காலத்தின் எழுத்தறிவு. உங்கள் குழந்தை கம்ப்யூட்டருக்கும் ஸ்மார்ட்ஃபோனுக்கும் கட்டளை பிறப்பிக்க, கோடிங் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டரின், ஸ்மார்ட்ஃபோனின் மொழியில் பேசும்போது உங்கள் பிள்ளை விரும்பியவாறு அவற்றை இயக்க முடியும். கோடிங் என்பது தமிழ், ஆங்கிலத்தைத் தாண்டிய உலகப் பொதுவான மொழி. ஏழு வயதில் இந்த மொழியை உங்கள் பிள்ளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பத்து வயதில் மொழியினை இலகுவாகக் கையாளும் பக்குவத்தைப் பெற முடியும். இதுவே உங்கள் பிள்ளையை டெக்னாலஜியால் ஆளப்படும் உலகில் மிகவும் தகுதியான ஆளுமையாக மாற்றப் போகிறது. உங்கள் குழந்தைக்கு கணக்கு, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என்று எந்தப் பாடத்தில் ஆர்வம் இருந்தாலும் அதனை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு கோடிங் என்ற பொது மொழியைக் கற்று தேர்ச்சி பெற வேண்டும். ஆகவேதான் பள்ளிக்கூடங்களில் கோடிங்கை கட்டாயப் பாடமாக்கும் வேலைகளை அரசாங்கங்கள் ஆரம்பித்து விட்டன. பெற்றோராக உங்கள் பிள்ளைகளை சபையில் முந்தியிருக்கச் செய்ய ஆசைப்படுவீர்கள். அதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது, பெங்களூருவைச் சேர்ந்த கோட் பண்ணு (codePannu) நிறுவனம்.

குழந்தைகளுக்குப் பல்வேறு சீஸன்கள் மூலமாக கோடிங் அறிவைப் பயிற்றுவிக்கிறார் கோட் பண்ணு நிறுவனத்தின் அனிதா ராமன். பதினைந்து வருடங்களாக தகவல் தொழில்நுட்ப உலகின் அதிசிறந்த பணிகளில் இருந்துவிட்டு, கல்விப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார் அனிதா. கல்வி பெறுவதன் மூலமாக மட்டுமே நம் நாடு சிறக்கும் என்பதில் அனிதா உறுதியாக இருக்கிறார். மிகவும் குறைந்த கட்டணத்தில் எல்லா குழந்தைகளுக்கும் கோடிங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே அனிதாவின் லட்சியம். ஆன்லைனில் ஜூம் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு பேட்ச்சில் ஐந்து குழந்தைகளை மட்டுமே சேர்க்கிறார் இவர். தனிப்பட்ட கவனம் கொடுப்பது ஒரு நோக்கம். குழுவாகப் படிக்கும் பண்பாட்டை வளர்த்தெடுக்கிறார். இதனால் குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள். நேரடியாக, நேரலையாக வகுப்புகள் நடத்தப்படுவதால், குழந்தைகளின் சந்தேகங்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகின்றன. “செய்து பார்த்துக்” கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொரு வகுப்பிலும் வழங்கப்படுகிறது. “விளையாட்டாகவே” கற்றுக்கொள்ள முடியும் என்கிற நல்வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. குழந்தைகளுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தருகிற வகையில் இந்த வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியில் புலமை பெற வேண்டுமானால் நீண்ட காலமாக, கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதே அணுகுமுறைதான் கோட் பண்ணுவில் கடைபிடிக்கப்படுகிறது. புதிய, புதிய சீஸன்கள் அறிமுகம் செய்யப்பட்டு குழந்தைகள் தொடர்ச்சியாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வி என்பது உற்சாகமளிப்பதாக இருக்க முடியும் என்பதை கோட் பண்ணு ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

கோட் பண்ணுவில் படிக்கும் சில மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சாட்சியங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

ராகவ்

ராகவ் (14), பெங்களூரு: கோட் பண்ணுவப் பத்தி ஒரு அழகான விஷயம் சொல்லணும். நான் இங்க சேரும்போது ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன. எனது ஒவ்வொரு சந்தேகமும் கோட் பண்ணுவில் தீர்க்கப்பட்டது. பிராக்டிக்கலாக ஒவ்வொரு ஸ்டெப்பும் சொல்லித் தரக்கூடிய கிளாஸாக கோட் பண்ணு அமைந்திருக்கிறது. இப்படியொரு வாய்ப்பு கிடச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். கோடிங்கை விளையாட்டாவே கத்துத் தர்றாங்க. பேசிப் பழகிக் கத்துக்கிற ஃபீலிங் ரொம்பவே பிடிச்சிருக்கு.

ராகவின் தாயார் பூமா: எனக்கு ரொம்ப, ரொம்ப சந்தோஷம். ரொம்பவே பாஸிட்டிவான படிப்புச் சூழலை உருவாக்கிச் சொல்லித் தர்றாங்க. ராகவை எல்லா லெவலும், எல்லா சீஸனும் கோட் பண்ணுவிலேயே படிக்க வைக்கணும்.  

ஹரிணி (13), சென்னை: அனிதா மேடம் நல்லா சொல்லித் தர்றாங்க. ஹோம் ஒர்க் வீடியோவை எத்தன தடவ வேணும்னாலும் பார்த்துத் தயாராகி வர்ற மாதிரி வகுப்பை அழகா வடிவமைச்சிருக்காங்க. அது எனக்குப் பிடிச்சிருக்கு.

நிதிஷா

நிஷிதா (12), தூத்துக்குடி: புரியற மாதிரி தெளிவா, ரொம்ப நல்லாவே சொல்லித் தர்றாங்க. ஜாலியா இருக்குது. ஆர்வமா இருக்கேன். கூடவே படிக்கிற நாலு பேரும் நல்லா பழகுறாங்க, பேசுறாங்க. நான் நல்லா கத்துக்கிட்டு ஆப்ஸ், கேம்ஸ் எல்லாம் பில்ட் பண்ணப் போறேன்.

ஆதித்யா

ஆதித்யா (16), தென்காசி: கோட் பண்ணுவில படிச்ச பிறகு நல்ல கான்ஃபிடன்ஸ் வந்திருக்கு. சந்தோஷமா இருக்கேன்.

ஆதித்யாவின் தாயார் பானு: எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. திருப்தியா இருக்கு. கோட் பண்ணுவில படிப்பு சொல்லிக் குடுக்கிறத நல்லா பண்றாங்க.

அசன்

அசன் (12), பொள்ளாச்சி: நல்லா சொல்லித் தர்றாங்க. ஈஸியா புரியற மாதிரி சொல்லித் தர்றாங்க. டவுட்ஸ் எப்ப கேட்டாலும் உடனே கிளியர் பண்றாங்க.

உசேன்

உசேன் (12), பொள்ளாச்சி: கோடிங் பழகுறதுக்கு இந்த வகுப்பு ரொம்ப உதவியா இருக்கு. சிறப்பா சொல்லித் தர்றாங்க. மேல் படிப்புலயும் இதையே படிக்கணும்னு ஆசை. இந்தக் கிளாஸால, ரொம்பவே நம்பிக்கை வந்திருக்கு.         

அசன், உசேனின் தாயார் ஷர்மி: இவங்களுக்கு சாயந்தரம் அஞ்சரை மணிக்குத்தான் கிளாஸ். ஆனா அஞ்சு மணிக்கே தயாராயிடுறாங்க. இந்த வகுப்ப ரசிக்கிறாங்க. என்ஜாய் பண்றாங்க.

விக்னேஷ்வரி (10), கோவில்பட்டி: அனிதா மேடம் ஜாலியா சொல்லித் தர்றாங்க. என்ன கேள்வி கேட்டாலும் கோபமாகாம, கூலா விளக்கம் சொல்லிப் புரிய வைக்கிறாங்க. இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

அக்‌ஷிதா (13), சென்னை: கிரியேட்டிவா சிந்திக்க வைக்கிறாங்க. சும்மா மனப்பாடம் செய்யாம, பிராக்டிக்கலா செய்து காட்டி, எங்களயும் செய்ய வைக்கிறாங்க. தந்தையர் தினத்துக்கு என் அப்பாவுக்கு கோடிங்கிலே வாழ்த்து செஞ்சு காட்டினேன். வாரம் சில முறை ரெண்டு டாப்பிக்க வேகமா சொல்லித் தந்திடுறாங்க. ஒரு டாப்பிக் மட்டுமே பொறுமையா சொல்லித் தரலாம்னு நினைக்கிறேன். தெளிவா, அழகா சொல்லித் தர்றது எனக்குப் பிடிச்சிருக்கு.

Like us on Facebook here

Enroll now here

Subscribe to us on YouTube here

கோட் பண்ணுவின் தனித்தன்மை என்ன?

கோடிங் சொல்லிக் கொடுக்கும் பல நிறுவனங்கள் குழந்தைகளை வெறும் மந்தைகளாகப் பாவிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் நிறைந்த அழகான உயிர் என்பதைக் கோட் பண்ணு நம்புகிறது. ஆகவேதான், ஒவ்வொரு பிள்ளைக்கும் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் கற்றுக்கொடுக்கிறது கோட் பண்ணு. இதனால் குழந்தைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆளுமைகளாக மாறுகிறார்கள். கோடிங்கில் டிபக்கிங் (Debugging) என்ற சிக்கல்களைத் தீர்க்கும் குணத்தைக் குழந்தைகளிடம் வளர்த்தெடுப்பதுதான் கோட் பண்ணுவின் தனித்தன்மையாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், குழந்தைகளின் தேர்வாக கோட் பண்ணு இருப்பதற்குப் பின்னால் உள்ள ரகசியமே இதுதான்.

டெக் மொழியின் சிற்பி இவள்

நாதமும் தாளமும் நீயானாய்

எல்லாம் ஒரே சாமிதான்

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here