DdpZNZsVwAEP5UZ

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 56-வது லீக் ஆட்டம் புணேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்தது.19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பஞ்சாப் 153 ரன்களை எடுத்தது. அந்த அணியில் மனோஜ் திவாரி 35 (30), டேவிட் மில்லர் 24 (22), கருன் நாயர் 54 (26) ரன்கள் எடுத்தனர்.

Untitled-2

சென்னை தரப்பில் லுங்கி கிடி 4 விக்கெட்டையும், தாகுர், பிராவோ தலா 2 விக்கெட்டையும், ஜடேஜா, சஹார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியசென்னை அணி 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணி சார்பில் அம்பட்டி ராயுடு – 1, டுபிளெசிஸ் – 14, சாம் பில்லிங்ஸ் – 0, ஹர்பஜன் சிங் -19 ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

Mohali: MS Dhoni of Chennai Super Kings in action during an IPL 2018 match between Kings XI Punjab and Chennai Super Kings at the Punjab Cricket Association IS Bindra Stadium in Mohali on April 15, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

சஹார் 39 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் தோனி 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இத்தோல்வியால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here