ஆளுநர் உரையுடன் இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (இன்று) தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையுடன் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றப்பின் முதன்முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அவருக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பளித்தனர்.

asse

தமிழ்த்தாய் வாழ்த்து முடிவடைந்தவுடன் ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அப்போது அவர்களை நோக்கி, பிளீஸ் உட்காருங்க… உட்காருங்க என ஆளுநர் கேட்டுக்கொண்டார். தனது உரை முடிவடைந்த பின்னர் கேள்வி எழுப்புங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவையில் இருந்து வெளியேறினர்.

ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட 5 அம்சங்கள்

1. ஜி.எஸ்.டி. வரிமுறையை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்கும், தூய்மை இந்தியா திட்டத்தைச் சிற்ப்பாக செயல்படுத்தி வருவதற்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றார்.

2. மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

3. நிதிச்சுமை இருப்பினும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

4. ஒகி புயலினால் காணாமல்போன கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்புப் பணி தொடரும் என்றார்.

5. வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்றார்.

இதையும் படியுங்கள்: மனச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை எண்ணம் வருகிறதா உங்களுக்கு ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்