பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் வால்மார்ட்

0
483

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு (16 பில்லியன் டாலர்கள்) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது . இது உலக அளவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 1,07,6 2448 கோடி ரூபாய்

பிளிப்கார்ட்டின் நிறுவனர்கள் சச்சின் பன்சால், பின்னி பன்சால் . இவர்கள் இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தவர்கள்.
2007 ஆம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் பெங்களூரில் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கினர்.

பின்பு ஆன்லைன் நிறுவனங்களான ஜபாங், மின்த்ரா, இ பே ( ebay ), ஆன்லைன் பேமேன்ட் நிறுவனமான போன்பே (phone pe) ஆகியவற்றையும் பிளிப்கார்ட் வாங்கியது

மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான அமேசானும் பிளிப்கார்ட்டின் பங்குகளை வாங்க முயன்றது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீதபங்குகளை ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.இதனை பிளிப்கார்ட்டின் பங்குதாரரான சாஃப்ட் வங்கியின் முதன்மை செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்

பிளிப்கார்ட்டில் 9 ஆண்டுகள் தலைமை செயல் அதிகாரியாகவும், பின்னர் நிர்வாக தலைவராகவும் இருந்த சச்சின் பன்சால்,. முழுவதுமாக நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார். பின்னி பன்சால் பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாகவே பணியை தொடர்கிறார். பிளிப்கார்ட்டை வாங்கியதன் மூலம் வால்மால்ர்ட், அமேசான் நிறுவனத்திற்கு, கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்