சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் அந்தந்த வார்டு அலுவலகங்களில் திங்கட்கிழமைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பணியாளர்களால் வீடுகள் தோறும் பிளாஸ்டிக் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 1-க்குப் பின் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, பயன்படுத்தினாலோ, இருப்பு வைத்திருந்தாலோ பறிமுதல் செய்ய மண்டல அளவிலும், கோட்ட அளவிலும் அதிகாரிகள், காவல்துறையினரைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here