இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு லண்டன் சென்று தலைமறைவான நிரவ் மோடி, லண்டனில் பலண்டனில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீட்டில், புதிய தொழிலில், புதிய கெட் அப்பில் வாழ்ந்து வருகிறார் என்று தி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் நாளிதழ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், லண்டனில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் நிரவ் மோடியை, செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்கிறார். செய்தியாளர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் sorry , no comment என்று மட்டுமே நிரவ் மோடி பதிலளிக்கிறார். மேலும் அந்த வீடியோவில், ரூ.9 லட்சம் மதிப்புள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich Hide) கோட்சூட் அணிந்து நீரவ் மோடி காணப்படுகிறார். அப்போது அவரிடம், இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கேட்பீர்களா என்று கேட்டபோது, sorry , no comment என கூறிவிட்டு செல்கிறார்.

அந்த வீடியோவில் காணப்படும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. முரட்டு மீசை, தாடி என ஒரு தாதாவைப் போல சிரித்த முகத்துடன் வீடியோவில் பேசுகிறார் நிரவ்.

லண்டனில் உள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் (72 கோடி ) மதிப்புள்ள ஒரு 3 படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பில் நீரவ் மோடி வாழ்ந்துவருகிறார் என்று லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாதத்துக்கு ரூ.15.48 லட்சம் வாடகையில்(17 ஆயிரம் பவுண்ட்) உள்ள 3 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி வீட்டில் நீரவ்மோடி(வயது48) வசித்து வருகிறார். தற்போது லண்டனில் புதிதாக வைர வியாபாரத்தையும் செய்து வருகிறார் நீரவ் மோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்ததாகப் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நிரவ் மோடியின் மாமாவுமான மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.

நிரவ்மோடியின் கீதாஞ்சலி குரூப் கம்பெனிகள் செய்த இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, நோட்டீஸ் அனுப்பியும், ஆஜராகவில்லை. இந்நிலையில், துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here