பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் : 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

0
116

பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 -ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள் 94.6 சதவீதமும் , மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். உள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in

ஆகிய அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

. இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் .

அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அவர்களுக்கு வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்