சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் இரும்பு தொழிற்சாலையில் , காஸ் குழாயில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததைத் தொடர்ந்து போலீஸும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) இந்த எஃகு ஆலையை நிர்வகித்து வருகிறது.

இன்று காலை 11 மணியளவில் எரிவாயுக் குழாயில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து பிலாய் ஸ்டீல் பிளாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வெடிவிபத்தில் குறைந்தது 9 பேர் மரணமடைந்திருப்பதாகவும் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளதோடு சிகிச்சை பெற்று வருபவர்கள் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது .

விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறும் போலீஸார் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். வெடிவிபத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக மீட்கும் பணிகள் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்