திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலும், மண்ணடி காளிகாம்பாள் கோயிலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவை. கோயிலே ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அப்பகுதி மக்களின் நாகரிகமும், அதன் பிற கட்டமைப்புகளும் அதனினும் பழமையானதாக இருக்க வேண்டும். பின் மெட்ராஸுக்கு 379 வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்படுவது ஏன்?

இதற்கான பதில் மிகவும் சுவாரஸ்யமானது. குறிப்பாக இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றுக்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பும் உள்ளது.
‘மெட்ராஸ் பிறந்த கதை’
news 5.003
“இன்று சென்னை என்று அழைக்கபடும் மாநகர் அன்று சிறு சிறு கிராமங்களின் தொகுப்பாக இருந்தது. அப்போது கடற்கரையை ஒட்டிய பகுதி வெங்கடப்ப நாயக்கரின் கட்டுப்பாடில் இருந்தது. 379 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அந்த பகுதியை வெங்கடப்பரிடமிருந்து பிரான்ஸிஸ் டே என்ற வணிகர் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கினார். பின் கோட்டை கட்டினர்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்தினார்கள். இப்படியாகதான் இந்த நகரம் உருபெற்றது. பிரான்சிஸ் டே நாயக்கரின் ஆளுகையில் இருந்த பகுதியை வாங்கிய இந்த நாளைதான் நாம் மெட்ராஸ் டேவாக கொண்டாடுகிறோம்” என தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன்.
அன்னிபெசன்டும் அடையாறும்
சென்னை என்றவுடன் நமக்கு கூவமும், அடையாறும்தான் நினைவுக்கு வரும். இப்போது நகரத்தின் கழிவுகளை சுமந்து செல்லும் அடையாறு அப்போது ஏகாந்தமான நிலப்பரப்பாக இருந்திருக்கிறது.
news 5.004
அடையாறு குறித்து அன்னிபெசன்ட், “பல நாடுகளை சென்று பார்ப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது அடையாறில் வாழ்வதும்…” என்கிறார்.
அதுபோலதான் பக்கிங்கம் கால்வாயும் இருந்திருக்கிறது. கூவத்தையும், அடையாறையும் இணைக்கும் இந்த கல்வாயில் ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்திருக்கிறது.
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இந்த படகுகளில் பொருட்கள் வந்திருக்கிறது. இந்த படகு போக்குவரத்தில் ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன் பயணித்து இருக்கிறார்கள்.

news 5.005

இந்த படகு போக்குவரத்து குறித்து தனது அனுபவத்தை பாவேந்தர் பாரதிதாசனார், “ஒரு நாள் மாலை 4 மணிக்கு சென்னை பக்கிங்கம் கால்வாயில் தோணி ஏறி, அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சேர்ந்தோம்…வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாகக் கழிந்தது” என்று குறிப்பிட்டதாக ‘கூவம் அடையாறு பக்கிங்கம்’ புத்தகத்தில் பதிவு செய்கிறார் கோ.செங்குட்டுவன்.
இப்போது சென்னை எப்படி இருக்கிறது?
மெட்ராஸ் பிறந்த கதை, செழிப்பாக இருந்த நதி… இவையெல்லாம் கடந்த காலம். இப்போதுச் சென்னை எப்படி இருக்கிறது? இப்போது அந்த நகரம் எப்படி உருமாறி இருக்கிறது? செயற்பாட்டாளரும், சென்னையின் பூர்வக்குடியுமான ஷாலின் மரியா லாரன்ஸிடம் பேசினோம்.
மரியா, “இந்த மண்ணின் மக்களை மெல்ல வெளியே அனுப்பிவிட்டு வேறொரு நிறத்திற்கு எங்கள் நிலம் மாறிக் கொண்டிருக்கிறது சென்னை” என்கிறார்.
news 5.006
“நான் வடசென்னைகாரி. என் சிறு வயதில் நான் என்ன பார்த்தேனோ, எதை உண்டு வளர்ந்தேனோ அது எதுவும் இப்போது இங்கு இல்லை. வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், மெல்ல அந்த நகரத்தை தனதாக்கிக் கொண்டு, எங்களை வெளியே அனுப்பி கொண்டிருக்கிறார்கள். ஒரு நகரம் காலத்திற்கு ஏற்றவாரு மாறும். மாற வேண்டும். ஆனால், அந்த மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நிலத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் ஆக்கிரமித்துவிட்டு, அவர்களின் பண்பாட்டை எங்களிடம் திணிக்கிறார்கள். நாங்கள் ஓடி ஆடி வளர்ந்த வீதிகளில், அந்நியராக நாங்கள் வெளியே நிற்கிறோம்” என்கிறார்.
மெட்ராஸ் தினத்தை கொண்டாடுவது என்பது எங்கள் நிலத்தை எங்களுக்கு உறுதிப்படுத்துவது என்கிறார் ஷாலினி.

courtesy:bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here