கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று( ஜூன் 10) மாலை நடந்தது.

இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரஃபேல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதினார்.

செம்மண் கோர்ட்டில் மாவீரனாகத் திகழும் நடாலின் ஆட்டத்திற்கு டொமினிக் தீமால் ஈடுகொடுக்க ஆட முடியவில்லை. முதல் செட்டை 6-4 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 6- 2 எனக் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாக பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஏற்கெனவே 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

DfWu9SFUEAA5iNX

ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார். நடால் 17 முறையும், சாம்ப்ராஸ் 14 முறையும் வென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்