பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் எதிர்ப்பது ஏன்?

The French Open which has been pushed back from May to a 27 September start, could host up to 11,500 spectators per day.

0
87

பாரீஸ் நகரில் மே 24 ஆம் தேதி தொடங்க இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சத்தால் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதற்கான தொகையை இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. புதிய தேதியில் போட்டி நடந்தால் மறுபடியும் டிக்கெட் விற்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு (2020) கட்டாயம் நடைபெறும் என்று அந்த கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்ட் கியூடிசில்லி உறுதியளித்துள்ளார். மேலும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு போட்டி நடத்தப்படும் என்றும், எனினும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை நிச்சயம்பின் பற்றுவோம் என்றும், போட்டி அரங்கில் எத்தனை பார்வையாளர்கள் அமரவேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது.

ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நடாலின் இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

34 வயதான நடால் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் களிமண் தரை டென்னிஸ் போட்டியான  பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13-வது முறையாக வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். 2005,2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here