பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால்(RafaelNadal) (ஸ்பெயின்) – டெல் பெட்ரோ(del Potro) (அர்ஜென்டினா) மோதினர். இதில் நடால் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்களில் டெல் பெட்ரோவை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.

ஏற்கெனவே மகளிர் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப்-ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும்(Dominic Thiem), இத்தாலியின் மார்கோ சென்சினாட்டோவும்(Marco Cecchinato) மோதினர்.
இதில் டொமினிக் தீம் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற நேர் செட்களில் மார்கோவை வீழ்த்தி முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

பிரெஞ்ச் ஓபனில் இறுதிக்கு முன்னேறிய இளம் வயது வீரர் என்ற சாதனையை தீம் செய்துள்ளார். (24 வயது 280 நாள்கள்).

இதையும் பாருங்கள் :

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்