பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வி வழங்கும் இலவச டேட்டா

0
121

வி (வோடபோன் ஐடியா ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.

இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. பின் வி செயலியை கொண்டு கூடுதல் டேட்டா பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பயன்படுத்தப்படும் சலுகை தீர்ந்ததும், புதிய சலுகையை தேர்வு செய்ய இலவச டேட்டா பயன்படலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக வி நிறுவனம் ஜீ5 சந்தா உள்ளடக்கிய சலுகைகளை அறிவித்து இருந்தது. வி நிறுவனம் அதன் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் இலவச ஜீ5 சந்தாவை வழங்குகிறது. அவற்றின் விலை ரூ.355, ரூ.405, ரூ.595, ரூ.795 மற்றும் ரூ.2,595 ஆகும்.

இத்துடன் புதிதாக ரூ. 351 சலுகையையும் வி அறிவித்தது. இதில் வொர்க் பிரம் ஹோம் சலுகை ஆகும். இதில் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

விநிறுவனத்தின் இந்த இலவச 1 ஜிபி டேட்டா உங்கள் அக்கவுண்டில் இருந்து 7 நாட்களுக்குப் பிறகு அகற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here