பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 விலையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் வழங்கப்படும்.

புதிய ரூ.599 சலுகை மும்பை மற்றும் புது டெல்லி அல்லாத பகுதிகளில் கிடைக்கிறது. இச்சலுகையில் அதிவேக டேட்டா வழங்கப்படவில்லை. இருப்பினும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் புதிய ரூ.599 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள் (மும்பை மற்றும் டெல்லி தவிர) உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வேலிடிட்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.549, ரூ.561, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498 உள்ளிட்ட சலுகைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இவற்றில் முறையே 60, 80, மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here