முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக, நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒமர் லுலு இயக்கத்தில் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்னும் பாடல் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. இந்தப் பாடலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சில நிமிடங்கள் நடித்திருந்தாலும், அவருடைய எக்ஸ்பிரஷன்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

priya-1

இந்நிலையில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீது ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணிக்க மலராய பூவி’ என்னும் பாடல் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளது எனக் கூறி படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது ஹைதரபாத்தின் ஃபலக்னுமா காவல்நிலையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் புகார் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்