பிரித்தாளும் பிரசாரம் மேற்கொண்ட பாஜக தோல்வி : வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியான டெல்லி தேர்தல் செய்திகள்

India’s ruling Bharatiya Janata party has suffered a major defeat in another key state election, after failing to win over voters in Delhi with a campaign that was one of its most polarising yet' The guardian.

0
254

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பல வழிகளில் போட்டியை ஏற்படுத்த முற்பட்ட   பாஜகவால் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

இந்நிலையில், வெளிநாட்டுப் பத்திரிகைகள் பல டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

தி நியூயார்க் டைம்ஸ்“கசப்பான டெல்லி தேர்தலில் மோடியின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

“மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி” என தி வாஷிங்டன் போஸ்ட், செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நடைபெற்ற தேர்தலில் ஏழை மக்களுக்கான கொள்கையில் பணியாற்றி, அரசு பள்ளிகளை கட்டமைப்பது, குறைந்த விலையில் மின்சாரம் வழங்கல், இலவசமாக மருத்துவம் மற்றும் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் என பல சிறந்த திட்டங்களை வழங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான போட்டியில் பாஜக குழிக்குள் தள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது.

அல்ஜெசீரா
இது தொடர்பாக, சுமார் 2 கோடி மக்கள் வசிக்கும் டெல்லியில் கெஜ்ரிவாலின் ஏழை சார்பு கொள்கைகளை வாக்காளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என விரிவாக எழுதியுள்ளது.

மேலும், டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவின் தேர்தல் பிரசாரம் பலனளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

திகார்டியன் பத்திரிகை, டெல்லியில் பாஜக தோல்வியை தழுவியதை மோடிக்கான தோல்வியென குறிப்பிட்டு உள்ளது. பிரித்தாளும் பிரசாரம் மேற்கொண்ட
பாஜக மற்றொரு முக்கியமான மாநிலத்தில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது என செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

டெல்லி தேர்தலில் பாஜக பின்னடவை சந்தித்து உள்ளது என பி.பி.சி.யும் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்த கெஜ்ரிவால் டெல்லியில் நலத் திட்டங்களை கொண்டு வந்து எவ்வாறு அரசியலில் புகழ் பெற்றார் என்பதை குறிப்பிட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here