பிரான்ஸில் கொரோனா தீவிரம் : ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் அதிகரிப்பு

Authorities in France are increasingly concerned about the high number of infections in France, even if the death toll and admissions to intensive care are way off the highs recorded in March and April.

0
258

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 9,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

பிரான்ஸில் ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரான்ஸ் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.

நேற்று(வெள்ளிக்கிழமை) பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், தனது பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது நாட்டில் குறிப்பிட்ட, 42 மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளர்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 9,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை  பதிவு செய்த போதிலும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், சோதனை  நடவடிக்கைகள் அதிகரிப்பு மற்றும் வைரஸ் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 14 முதல் ஏழு நாட்கள் வரை குறைப்பதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here