பாரிஸ் நகரில் நான்காவது மாடி பால்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார்.

ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார் மமூது கசாமா (Mamoudou Gassama). அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மமூது கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார். மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்தன . சிறுவனை அவர் காப்பாற்றும் வீடியோ, இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவிவந்தது .

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தின் காரணமாக Mamoudou Gassama-வுக்கு உடலில் ஆங்காங்கே சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையின் அப்பா வெளியில் ஷாப்பிங் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை எப்படி அங்கே வந்தது என்பது குறித்து சரியாகத் தெரியாத காரணத்தினால் போலீஸார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

505

506

மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்