பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

BrahMos missile hit the target successfully with pinpoint accuracy after performing high-level & extremely complex manoeuvres.

0
72

அரபிக்கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. 

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகள் 300 கி.மீ தொலை தூரத்துக்கு சென்று தாக்கும் திறன் படைத்தது.

பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்து மட்டுமின்றி கப்பல், விமானம், நீர்மூழ்கி கப்பல் மற்றும் நகரும் வாகனங்களில் இருந்து வெற்றிகரமாக செலுத்த முடியும்.

இந்நிலையில் அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என டிஆர்டிஓ தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here