பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடித்த இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப் படங்கள் 1,00 200 நாள்கள் ஓடுவது ஒருகாலத்தில் சகஜமாக இருந்தது. ஒரு படத்தை ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும்முறை வந்த பிறகு ஒரு படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே சாதனையாக மாறியது. ஐம்பது தினங்கள் என்பது பெரும் சாதனை. 100 நாள்களை நினைத்தே பார்க்க முடியாது.

விஷால் தயாரித்து நடிக்க அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்புத்திரை கமர்ஷியலாக வெற்றி பெற்றது. சமந்தா நாயகியாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்தப் படம் 100 நாள்களை நிறைவு செய்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். தற்போது வெற்றி விழாவை வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

இரும்புத்திரையின் 100 வது நாள் போஸ்டரில் எந்தத் திரையரங்கின் பெயரும் இல்லை. அதாவது எந்தத் தியேட்டரிலும் படம் 100 நாள்கள் ஓடவில்லை. பிறகு ஏன் இந்த விழா?

ஆகஸ்ட் 29 – நாளை- விழா நடக்கும்போதாவது விளக்குவார்களா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்