முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று(சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புனித பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை நடத்துகின்றனர். இதில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டனர்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பு இந்த நாளில் மேலும் பலப்படட்டும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்