பிரதமர் மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை காட்டினால் மக்களும் சான்றிதழைக் காட்டுவார்கள் – திக்விஜய் சிங்

0
424

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கடந்த சில தினங்களுக்கு முன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மோடியை தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு நாடளுமன்ற நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிலைக்குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் திக்விஜய சிங் சென்று இருந்தார். அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து திக்விஜய சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது.

தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நடைமுறைக்கு வந்தால், பிரதமர் நரேந்திர மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை  காட்டவேண்டும்  ஒரு வேளை பிரதமர் மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை காட்டி விட்டால், நாங்கள் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு தேவையான ஆவணங்களை கொடுப்போம் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here