பிரதமர் மோடி – ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சந்திப்பு

Prime Minister Narendra Modi called on President Ram Nath Kovind and briefed him on the issues of national and international importance at Rashtrapati Bhavan today.

0
133

பிரதமர் மோடி டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து  பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில் சர்வதேச, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் லடாக் விவகாரம் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தியா – சீனா வீரர்கள் மோதியதில் காயம் அடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here