நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் குழந்தை யார் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு குழந்தையுடன் இருக்கும் 2 புகைப்படங்களை வெளியிட்டார்.
அதற்கு ‘ஒரு முக்கியமான விருந்தினர் என்னை சந்திக்க நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்’ என்று மோடி தலைப்பிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த பேபி யாராக இருக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
ஒரு புகைப்படத்தில் குழந்தையை முழுவதுமாக மோடி மடியில் வைத்திருக்கிறார். மற்றொன்றில் அது மோடி மடியில் உட்கார்ந்து கொண்டு மேஜை மீதிருக்கும் சாக்லேட்டை ஆர்வத்துடன் பார்க்கிறது.
முதலில் நாடாளுமன்ற அலுவல்களைக் காண வந்திருப்பவர்களில் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் விசாரத்ததில் பாஜக எம்.பி. சத்திய நாராயணன் ஜதியாவின் பேரன் என்பது தெரியவந்துள்ளது.