சமீபத்திய தற்கொலைகளுக்கு பாஜக தலையிலான தலைமையிலான அரசாங்கத்தை குற்றம் சாட்டிய சிவ சேனா
பிரதமர் நரேந்திர மோடி ஏழை மக்களுக்கு நல்லது செய்வார் என்ற கனவில் இருந்து வெளியில் வாருங்கள் என்று கூறியுள்ளது .

மும்பையின் பந்த்ரா பகுதியில் நான்கு பேர் கொண்ட குடும்பமும், கஃப்பே பரேட் பகுதியில் மூன்று பேரைக் கொண்ட குடும்பமும் தற்கொலை செய்து கொண்டதும் , இதுமாதிரியான மற்ற தற்கொலை சம்பவங்களையும் தொடர்ந்து பாஜக மீது இக்குற்றச்சாட்டை சிவசேனா வைக்கிறது .

சிவ சேனா தனது நாளேடான சாம்னாவில் மும்பை மற்றும் இதர மஹாராஷ்டிர மாநிலப் பகுதியில் தொடரும் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் தற்கொலைகள் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறது .

அரசில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் செய்வதிலேயே முழு நேரத்தையும் செலவிடுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியைக் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆட்சி என்று மக்கள் கூறிக் கொண்டுதான் இருந்தார்கள் . அதை மக்களும் வரவேற்றார்கள். அதே போல் மோடியின் ஆட்சியையும், மாநிலத்தில் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆட்சியையும் மக்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆட்சிதான் என்று நினைத்தார்கள் . ஆனால் மக்கள் தினமும் பசியாலும் பட்டினியாலும் தினமும் மடிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. பசி பட்டினியால் வேறு வழியில்லாமல் முடிவில் குடும்பங்களாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இது வரைக்கும் நாம் பேசிக் கொண்டிருந்தது மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றித்தான் , ஆனால் தற்போது மும்பை மற்றும் இதர மஹாராஷ்டிர மாநிலப் பகுதிகளில் பசியால் பட்டினிச் சாவுகள் அதிகரித்துள்ளன. இதுதான் நரேந்திர மோடியின் நல்லாட்சியா? acche din? [ acche din meaning Good days are coming] என்று கேள்வி எழுப்பியுள்ளது சாம்னா.

ஆட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் செய்வதில் பரபரப்பாக இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லாட்சி தராமல் மக்களை மரணத்துக்கு தள்ளுகிறது இந்த அரசு. மோடி ஏழை மக்களுக்கு நல்லது செய்வார் என்ற கனவில் இருந்து வெளியில் வாருங்கள் என்றும் கூறியுள்ளது .

பாஜக அரசாங்கத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதற்கான பிரச்சாரமாக Sampark Abhiyan- ஐ பாஜக அரசு துவங்கியுள்ளது. அதாவது, 2019 தேர்தலை மனதில் வைத்து பாஜக கட்சி நிர்வாகிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அதன்படி பாஜக தலைவர்கள் பிரபலங்களை சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தின் போது ஆளும் பாஜகவினருக்கு தினமும் பாலிவுட் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும், தொழிலதிபர்களைக் காணவே நேரம் சரியாக இருக்கின்றது. இந்நிலையில் தினமும் ஏழை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் காண அவர்களுக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கும். மெட்ரோ, ஹைப்பர் சிட்டி, புல்லட் ரயில்கள் போன்ற மிகப் பெரிய திட்டங்களினால் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் சாம்னாவில் தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here