டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.

கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ரூ. 40 ஆயிரம் கோடி நலத் திட்டங்களைத் தொடங்கிவைத்தும்,  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.

அவர் வருகையையொட்டி இந்த #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் முதலிடத்தில் டிரெண்டாகி இருக்கிறது.

1

இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திரமோடி பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கு வந்த போது, அதற்கு முந்தைய நாளே #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் முதலிடத்தில் டிரெண்டானது . மேலும் #GoBackSadistModi டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது .

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவிலும் , உலக அளவிலும் முதலிடத்தில் டிரெண்டானது.

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏபரல் 12, 2018 அன்று சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவருக்கு எதிரப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கறுப்புக் கொடியைக் காட்டியும், கறுப்புப் பலூன்களைப் பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவிட்டரில் இதுதொடர்பான #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது .

கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழா மேடைக்கு வருகிறார்.

இந்த விழாவில், பாம்பனில் ரூ. 250 கோடியில் புதிய பாலம், ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே (17.20 கி.மீ.) ரூ. 208 கோடியில் புதிய ரயில் பாதை, மதுரை- சென்னை எழும்பூர் தேஜஸ் ரயில் சேவை, மதுரை-செட்டிகுளம், செட்டிகுளம்-நத்தம் நான்குவழிச் சாலைத் திட்டம், குமரியில் சாலைப் பாதுகாப்புப் பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகத் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைக்கும் பிரதமர், மதுரை- ராமநாதபுரம் நான்குவழிச் சாலை, குமரி மாவட்டம், மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள், பணகுடி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here