பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீஸ்வரர்

0
673

பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ்சொரெஸ் சுவிட்சர்லாந்து டாவோஸ்நகரில் நடைபெற்றமாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் உலக அரசியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்துப் பேசினார்.

அவர் பேசும்போது இந்தியாவில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார். தன்னாட்சி முஸ்லிம் பிராந்தியமான காஷ்மீர்மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். கோடிக் கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க அச்சுறுத்துகிறார் என்று கூறினார். 

மேலும், அமெரிக்கஅதிபர் டொனால் டிரம்ப்பையும்  கடுமையாகச் சாடினார். 

அதிபர் டிரம்ப் உலகம் தன்னைச் சுற்றி வேண்டும் என்று விரும்பும் இறுதி நாசீசவாதி. அமெரிக்க அதிபரானதும் அவரது கற்பனை உண்மையாகி விட்டபோது, அவரது நாசீசம்  ஒரு நோயியல் பரிமாணத்தை உருவாக்கியது. உண்மையில், அவர் அரசியலமைப்பினால் அமெரிக்க அதிபர் பதவிக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளார், அதற்காக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here