தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மோடி பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என சமீபத்தில் தெரிய வந்தது.

பிரதமர் மோடி, மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால், அவரது பெயரை கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு பரிந்துரைத்து காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளதாக கோவா காங்கிரஸ் செய்தி தொட்ர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறினார்.

இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உள்ளது என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்தது.

இதுதொடர்பாக கோவா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றுள்ளார். எனவே அதிக நாடுகளுக்கு சென்ற பிரதமர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Dh0ja9NXkAIWFS9

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here