அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது குறித்து பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசினார். அப்போது அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, டெங்கு தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்” என்றார். பிரதமர் மோடி என்பதற்குப் பதிலாக மன்மோகன் சிங் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். மேலும் அவர், அதனைக் கண்டுகொள்ளாமல் தனது பேச்சைத் தொடர்ந்துகொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும், பிரதமர் மோடி இருக்கும்வரை தங்களை யாரும் மிரட்ட முடியாது என்றும் பேசியிருந்தார்.

தங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது பிரதமரின் பெயரைச் சரியாக உச்சரித்தும், மக்கள் பிரச்சினைகள் என்று வரும்போது பிரதமர் யாரென்றே தெரியாமலும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்