டெல்லியில் 28வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில், பிரதமர் அலுவலகம் முன்பு ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : “தலையை வெட்டக்கூடத் தயார்”: பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு

தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28 நாட்களில் விவசாயிகள் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்?: அவசியம் இதைப் பாருங்கள்

இந்நிலையில் 28வது நாளான திங்கட்கிழமையன்று தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகம் முன்பு ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கடும் வெயிலில் சாலையில் நிர்வாணமாக உருண்டு போராடினார்கள். நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழக விவசாயிகளை டெல்லி போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இதையும் படியுங்கள் : உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா?: இப்படிச் செய்யுங்கள்

இந்த போராட்டம் குறித்து பேசிய போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, “பிரதமரைச் சந்திக்க வைப்பதாகக் கூறி அழைத்துவந்து வேறு அதிகாரியிடம் அழைத்து சென்று மனு கொடுக்க வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வைப்பதாகக் கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். எங்களை பார்க்க பிரதமர் மோடி மறுத்து விட்டார், யாரும் எங்களைப் பார்க்க முன்வரவில்லை அதனால்தான் பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்துகிறோம். பாருங்கள் விவசாயிகளின் பரிதாப நிலையை” எனக் கூறினார்

இதையும் படியுங்கள் : சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்!

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்