பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரேணுகா சவுத்ரி விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி புதன்கிழமை (நேற்று) உரையாற்றினார். அப்போது அவர், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, தேசிய அடையாள அட்டையை (ஆதார்) அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததாத் தெரிவித்தார். மேலும் இதனை காங்கிரசார், தாங்கள்தான் இத்திட்டத்தினை உருவாக்கியதாக பெருமை கொள்கின்றனர் எனவும் விமர்சித்தார்.

அப்போது அவையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரேணுகா சவுத்ரி மிகவும் பலமாக சிரித்தார். இதனைக் கண்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “உங்களுக்கு என்ன பிரச்சினை? அவ்வாறு இருந்தால் டாக்டரிடம் செல்லுங்கள்” என்றார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, “அவரைச் சிரிப்பதைத் தடுக்க வேண்டாம். ராமாயணத் தொடருக்குப் பின்னர் இப்போதுதான் இதுபோன்ற சிரிப்பைக் கேட்கிறேன்” என்றார். அவர் ராமாயணத்தில் வரும் எதிர்மறையான பெண் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ரேணுகா சவுத்ரி, ”ஆதார் அட்டைக்கு எதிராக இருந்தவர் மோடி. ஆனால் தற்போது அவர், அதனை ஆதரித்துப் பேசுகிறார். ஆதார் யோசனையை அத்வானி முன்வைத்ததாகவும் கூறினார். இதனால் எனக்கு சிரிப்பு வந்தது” என்றார். மேலும் அவர், பிரதமர் மோடி, தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதாகவும், இது பெண்ணை இழிவுபடுத்துவதாகவும் உள்ளது என குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றும், பிரதமர் மோடி இதுபோன்று எப்படி பேசலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here