டிவிட்டரில் #GoBackModi, #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது . #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது .

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (இன்று) சென்னை வருகிறார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக-அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக, மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

அவரின் வருகையையொட்டி #GoBackModi, #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னர் மார்ச் 1 ஆம் தேதி மோடி கன்னியாகுமரிக்கு வந்தபோது #GoBackModi இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

பிரதமர் நரேந்திரமோடி பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூருக்கு வந்த போது, அதற்கு முந்தைய நாளே #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் முதலிடத்தில் டிரெண்டானது . மேலும் #GoBackSadistModi டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது .

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவிலும் , உலக அளவிலும் முதலிடத்தில் டிரெண்டானது.

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏபரல் 12, 2018 அன்று சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவருக்கு எதிரப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கறுப்புக் கொடியைக் காட்டியும், கறுப்புப் பலூன்களைப் பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவிட்டரில் இதுதொடர்பான #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது .

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (இன்று) சென்னை வருகிறார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக-அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். முன்னதாக, மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கன்னியாகுமரி,  திருப்பூர்,  மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்  நடந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

முதல் முறையாக, அதிமுக-பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக,  புதிய நீதிக் கட்சிகளின் தலைவர்களும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் இணைந்த பிறகு அக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ்,  இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையுமா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தேமுதிக இதுவரை தனது கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. தேமுதிக தனது கூட்டணி முடிவு குறித்து  காலையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here