பிரதமரின் கேஸ் இணைப்புத் திட்டம் பாதியிலேயே நின்றுவிட்ட அவலம் – பிபிசியின் ஆய்வு

0
168

கேஸ் சிலிண்டரை 2016 இல் வாங்கும்போது விலை ரூ520, தற்போது இதன் விலை ரூ770 என்கிறார் குட்டி தேவி . 

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் 2016 இல் முதன்முதலாக கேஸ் இணைப்பைப் பெற்றவர் இந்த குட்டி தேவி , கேஸ் சிலிண்டரின் விலை அதிகபடியானதால்  தற்போது இவர் விறகு அடுப்பில் சமைக்கிறார்  என்று பிபிசி வெளியிட்ட  செய்தி கூறுகிறது . 

பிரதமரின் உஜ்வாலா திட்டம் அறிமுகமான நாளிலிருந்து இதுவரை , அதன் விளம்பரங்களில் இடம்பெறுபவர் குட்டிதேவிதான். வேறு நலத்திட்டங்கள் பாதியில் நின்றுவிட்ட  மாதிரி, உஜ்வாலா திட்டமும் பாதியில் நின்றுவிட்டதால் உஜ்வாலாவின்  விளம்பர முகமான  குட்டி தேவியும் விறகு அடுப்பில் (வரட்டி அடுப்பு) சமைக்க ஆரம்பித்து விட்டார்.  

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் , வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்கு மானியத்துடன் கூடிய 12 கேஸ் சிலிண்டர்கள் உண்டு. கேஸ் இணைப்பும், முதலில் கொடுக்கப்பட்ட சிலிண்டரும் அரசால் இலவசமாக வழங்கப்பட்டது. கேஸ் சிலிண்டர் காலியான பிறகு அதனை நிரப்ப அந்த குடும்பங்களே செலவு செய்ய வேண்டும். 

குட்டி தேவியினால் 3 வருடங்களில் வெறும் 11 கேஸ் சிலிண்டர்களே வாங்க முடிந்திருக்கிறது. நான் 2016 இல் இந்த கேஸ் சிலிண்டரை பெறும்போது அதன் விலை ரூ520, தற்போது இதன் விலை ரூ770. அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று பிபிசியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

உஜ்வாலா திட்டத்தின்கீழ் கேஸ் சிலிண்டர் பெற்றவர்களில் வெறும் 30 சதவீதத்தினரே திரும்ப திரும்ப கேஸ் சிலிண்டர் வாங்குகிறார்கள் என்று   கேஸ் ஏஜன்சி உரிமையாளர் அகிலேஷ் குப்தா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ்  இல்லாதவர்களுக்கு ஒரு கேஸ் சிலிண்டரின் விலை இரண்டு மடங்காகிவிட்டது. 

பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் , ராஜஸ்தானில்  நடத்திய ஆய்வு ஒன்றில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வாங்கியவர்களில் 85 சதவீதத்தினர் இன்னமும் விறகு அல்லது வரட்டி அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் ஹரிசால் கிராமம் ஸ்மார்ட் கிராமமாக மோடியால் அறிவிக்கப்பட்டது. இந்த கிராமம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியாக மோடியால் அறிவிக்கப்பட்டது. ஆனால் மோடி குறிப்பிட்டது மாதிரி அந்த கிராமம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று நவ்நிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விளம்பரங்களில் இடம்பெற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ராஜ் தாக்கரேயின் பிரச்சாரத்தில் பங்கேற்ற அவர்கள் கூறியுள்ளனர் . 

bbc.com