இந்த உலகம் அல்லது பிரபஞ்சம் எத்தனை ஆண்டு காலம் வரை இருக்கிறதோ, அத்தனை ஆண்டு காலம் நன்மை மற்றும் தீமைக்கிடையே போராட்டம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். நம்முடன் வாழும் நமக்கு உறவுள்ள மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மீது பகை கொண்டு, நமக்கு பல வகைகளிலும் தீமைகளை செய்கின்றனர். துஷ்ட சக்திகளை அழிப்பதற்கென்றே சிவப்பெருமானின் அம்சாமாக தோன்றியவர் பைரவர். அதில் சண்ட பைரவருக்கான “சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்” இதோ.
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே மஹாவீராய தீமஹி தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் மனதில் பைரவரை நினைத்து 27 முறை துதித்து வருவது சிறப்பு. மாதத்தில் செவ்வாய்கிழமை வருகிற தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரின் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனம் செய்து, விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துஷ்ட சக்தி மற்றும் மாந்திரீக ஏவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். வீடு, நிலம் போன்ற சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
நாம் வணங்காவிட்டாலும் நம்மை காப்பவர் இறைவன் ஆவார். நமது சைவ மத புராணங்களின் படி சிவனின் ஒரு வடிவமாக தோன்றிவர் பைரவ மூர்த்தி. மனிதர்களுக்கு நண்பனாக இருக்கும் நாயை தனது வாகனமாக கொண்டிருக்கிறார் இவர். இந்த பைரவருக்கு பல வடிவங்கள் உண்டு, அதில் மக்களால் அதிகம் வழிபடப்படும் பைரவர்கள் எட்டு பேர். சண்ட பைரவருக்குரிய இந்த காயத்ரி மந்திரம் துதித்திப்பதால் நம்மை எந்த வகையான தீவினைகளும் அண்டாது.