பிரச்சனை பண்றாங்க, ஆனா பெயரைச் சொல்லப் போறதில்லை – வெங்கட்பிரபு ‘ஷாக்’ வீடியோ

0
297


தனது ஆர்கே நகர் திரைப்படம் அறிவித்தபடி ஏப்ரல் 12 வெளியாவதற்கு பதில் தேர்தல் முடிந்த பிறகே வெளியாகும், நாங்கள் செய்யாத தவறுகளுக்காக பிரச்சனைகளை சந்தித்துள்ளோம் என வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

வைபவ் நடிப்பில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனமும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ஆர்கே நகர். ஏப்ரல் 12 இந்தப் படம் வெளியாவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் வெங்கட்பிரபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆர்கே நகரை 12 ஆம் தேதிக்குப் பதில் தேர்தல் முடிந்த பிறகே வெளியிட முடியும், செய்யாத தவறுக்கு நாங்கள் பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறோம், யார் என்ன என்று பெயரை சொல்லப் போவதில்லை, ஆர்கே நகர் படம் அரசியல் படமல்ல, யார் மனதையும் புண்படுத்தாத ஜனரஞ்சகமான படம், இப்போது அளித்த அதே ஆதரவை தேர்தலுக்குப் பிறகு படம் வெளிவரும்போதும் தர வேண்டும், வாழு வாழவிடு என்று அதில் கூறியுள்ளார்.

படம் எடுப்பதைவிட அதை திரைக்கு கொண்டுவருவது தமிழ் சினிமாவில் பெரும் சவாலாக உள்ளது. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு போன்றவர்களே இந்த சவாலை எதிர்கொண்டு கண்ணீர்வடிக்கிற நிலையில் சாதாரணர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. யார் பிரச்சனை செய்கிறார்கள் அல்லது இந்தப் பிரச்சனைகளுக்கு எது காரணம் என்பதை வெளிப்படையாக பேசி தீர்க்க வேண்டிய இக்கட்டில் தமிழ் சினிமா உள்ளதையே ஆர்கே நகர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here