தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். அதன்பின் உடனடியாக நாளை மறுநாளே (20 ஆம் தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார்.

இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார். முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் 20 ஆம் தேதி தொடங்கும் அவர் ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவு செய்கிறார். ஒருநாள் கூட இடைவெளியின்றி அவர் 18 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து, அவர் வாக்கு சேகரிப்பை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூரிலும், மாலை 5 மணிக்கு தஞ்சையிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு :

காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.

காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி – தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.

காலை 10 மணி – தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி – வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.

காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.

மாலை 5 மணி – திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.

மாலை 5 மணி – திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி – தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.

காலை 10 மணி – மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி – விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.

காலை 10 மணி – சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.

காலை 10 மணி – வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.

மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதி காலை 10 மணி – அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.

மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – கோவை பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – கரூர் பாராளுமன்ற தொகுதி.

மாலை 5 மணி – கள்ளக் குறிச்சி பாராளுமன்ற தொகுதி.

காலை 10 மணி – விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.

மாலை 5 மணி – ஆரணி பாராளுமன்றத் தொகுதி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் 2 வது கட்ட பிரசாரத்தை 7 ஆம் தேதியே தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 16 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here