பிரக்ஸிட்டை அமல்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டால், மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறலாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பெரும்பாலானோர் பிரக்ஸிட் எனப்படும் வெளியேறும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வரும் மார்ச் 29ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்ற நிலையில், இதுவரை விதிகளை எவற்றையும் வகுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ள பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்