பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிரக்சிட் ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற பிரிட்டன் அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் பிரக்சிட் செயல்திட்ட வரைவுக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிரக்சிட் செயல்திட்டம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், ஒப்பந்தங்கள் எதுவுமின்றி, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று, வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரக்சிட் ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சியிலேயே ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் ஒப்பந்தத்தின் மீது கடும் எதிர்ப்பு இருப்பதால், நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின்போது மீண்டும் தோல்வியடையும் நிலை உருவாகியிருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here