மின் வாரிய தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டுமென தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், ”மின்வாரிய தொழிலாளர்களுக்கான 11ஆவது புதிய ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், கடந்த 31.01.2017 அன்று மின்துறை அமைச்சர், “வேலைப்பளு காரணமாக தொழிற்சங்கங்களுடன் பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும். எனவே, இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 2500 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 1250 ரூபாயும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்களிடம் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கங்கள், 12ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிடில் பிப்ரவரி 16 தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 2.57 காரணியைக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை ஏற்காமல், 2.44 வழங்கிட அரசு உறுதியாக இருந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைவரும் அறிந்ததே!
எனவே தமிழக அரசு, 2.57 காரணியைக் கொண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மின் வாரியத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்