பிப்ரவரி 1 முதல் ஆண்ட்ராய்டு, iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

0
247

பிப்ரவரி 1, 2020 முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்கள் அவர்கள் chats history-ஐ காலக்கெடுவிற்கு முன் ஏற்றுமதி செய்யாவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல்களை முழுமையாக இழக்க நேரிடும்.

சமீபத்தில், விண்டோஸ் போன் பயனர்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் டிசம்பர் 31, 2019 முதல் நிறுத்தியது.

இதன்மூலம் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு முன் வந்த ஆண்ட்ராய்டு பதிப்பு, iOS 8 மற்றும் அதற்கு முன் வந்த ஆண்ட்ராய்டு பதிப்பு பயன்படுத்தும் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், இந்த பயனர்கள் ஏற்கனவே புதிய வாட்ஸ்அப் கணக்குகளை தொடங்குவதற்கோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் உபயோகிக்கவோ அனுமதி இல்லை. இவர்கள் அடுத்த மாதம் வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு, பயனர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது.

இதன் மூலம் லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பைப் செயலியைப் பயன்படுத்த முடியாது. இவர்கள் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களை புதிய பதிப்புகளுக்கு அப்டேட் செய்ய வேண்டும், அல்லது அவர்களின் உரையாடல்களை  Export செய்வதன் மூலம் அவற்றை அவர்கள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் chats-ஐ சேமிக்க, வாட்ஸ்அப்பிற்குச் சென்று, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் chat-ஐ திறந்து chat திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘three dots‘ – ஐ அழுத்தவும்.  More > Export Chat > மீண்டும் அழுத்தவும். பின்னர் நீங்கள் ஊடகத்தை (media) சேர்க்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பொருத்தமான ஆப்ஷனை தேர்ந்தெடுத்ததும், உங்கள் chat-களைச் சேமிக்க விரும்பும் தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பும் ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அங்கு சேமிக்கப்பட்ட chat-களை  மீண்டும் நீங்கள் வாட்ஸ் அப் செயலியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களில் வாட்ஸ்அப் இன்னும் செயல்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு, Android OS 4.0.3 மற்றும் புதிய iOS 9 ஆகிய புதிய இயங்கு தளங்களை வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது. இந்த இயங்குதளங்களில்மீண்டும் நீங்கள் வாட்ஸ்அப் செயலியை உபயோகிக்கலாம்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here