ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. தற்போது பிசிசிஐ இவ் இரு அணிகளும் விளையாடும் போட்டிகள் நடைபெறும் இடங்களை அறிவித்துள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகின்றது. இதில் டெஸ்ட் போட்டியை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்த நிலையில் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அப்போட்டிகள் நடைபெறும் இடத்தை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில் ஒரு நாள் போட்டிகள் ஹைதராபாத், நாக்பூர், ராஞ்ஜி, மொஹாலி, டெல்லி ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் பெங்களூரு, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்